திருகோணமலை மாணவர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டதன் மர்மம் என்ன???

திருகோணமலையில் வைத்து மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் அது குறித்து இலங்கையிலும் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுவருகிறது.

மேற்படி திருகோணமலை மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது அவர்களின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு சாட்சியமளிக்க வேண்டாமென இலங்கை அமைச்சர்கள் சிலர் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து இலங்கையின் நாடாளுமன்றத்திலும் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை சார்பில் செல்லும் பிரதிநிதிகள் குழு தொடர்பில் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கும் – மஹிந்த சமரசிங்கவுக்குமிடையில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

எனவே இதன்போது திருகோணமலை மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது அவர்களின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு சாட்சியமளிக்க வேண்டாமென கூறிய அமைச்சர்களின் பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது, இந்த பூசுற்றல் வேலையை என்னிடம் வைத்துகொள்ள வேண்டாம் என சபை முதல்வர் சபையில் சினத்துடன் தெரிவித்தார்.

எனினும் பாராளுமன்றத்தில் இவ் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்களின் நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய மஹிந்த சமரசிங்க எம்.பி ஜெனிவா நகர்வுகள் குறித்தும் ஜனாதிபதி நியமித்த குழு குறித்தும் சபையில் தெளிவுபடுத்தினார்.இந்நிலையில் சபை முதல்வருக்கும், சமரசிங்க எம்.பிக்கும் இடையில் வாக்குவாதம் ஆரம்பித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: