தமிழ்லீடர்

திருகோணமலை-வெடி பொருட்களை கைப்பற்றிய கடற்படையினர்!

திருகோணமலை – ஏரக்கண்டி கரையோர பகுதியில் இருந்து ஒருதொகை வெடிபொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அதனையடுத்து குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்றநிலை காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேற்படி குறித்த வெடிபொருட்களை நேற்று கைப்பற்றியதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.மேலும் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த விடயம் தொடர்பான மேலதிக விடயங்கள் தெரியவராத நிலையில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: