திருக்கோயில் பிரதேசத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று இடம் பெற்றது.

நேற்றய தினம் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் இன ஒற்றுமைக்கும், சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தி மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் மக்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிசாரை சுட்டு படுகொலை செய்தமையை வன்மையாக கண்டித்து திருக்கோவில் பிரதேசத்தில்நேற்றய தினம் திங்கட்கிழமை 03ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது திருக்கோவில் பிரதேச சமாதானத்தை விரும்பும் மக்கள் வணிகம் எனும் அமைப்பினால் திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக கண்டன ஆர்பாட்டத்தினை முன்னெடுத்ததுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கில்களில் இளைஞர்கள் பேரணியாக தம்பிலுவில் வரை சென்று தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

இங்கு கலந்து கொண்ட பொது மக்கள் சமாதான சூழலை சீர்குலைக்காதே,படுகொலைகள் வேண்டாம்,பொலிசாரின் படுகொலையை கண்டிக்கின்றோம் போன்ற சுலோக அட்டைகளைகள், வெணர்கள் என்பன ஏந்திய வண்ணம் தமது எதிர்ப்பினை அமைதியான முறையில் தெரிவித்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பொது மக்கள் இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு பொது மக்களாகிய நாம் இடமளிக்கப் போவதில்லை. தற்போது நாடு அமைதியான முறையில் சென்று கொண்டு இருப்பதுடன் எந்த நேரத்திலும் எங்கும் யாராயினும் அச்சமின்றி அடையாள அட்டைகள் இன்றி பயணிக்ககூடிய மற்றும் வாழக்கூடிய நிலைமைகள் காணப்படுகின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்ற இரு பொலிசாரின் படுகொலையானது மிகவும் கவலையளிக்ககூடிய, கண்டிக்ககூடிய  சம்பவமாகும்.நாட்டின் அமைதிக்கு சவால் விடுப்பதாக இச்சம்பவம் அமைகின்றது இதனை பொது மக்களாகிய நாம் வன்மையாக கண்டிப்பதுடன் நாட்டில் இவ்வாறான ஒரு சம்பவம் இனி ஒரு போதும் இடம்பெறாது இருப்பதனை அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: