தமிழ்லீடர்

தீடிர் ஜனாதிபதி தேர்தலுக்கு வாய்ப்பில்லை!

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதா?இல்லையா?என்பது குறித்து நானே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேற்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடி ஜனாதிபதி தேர்தலிற்கு வாய்ப்பில்லை எனவும் அவ்வாறான எண்ணம்  எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனையவர்களின் நிகழ்ச்சிநிரலிற்கு ஏற்ப நான் செயற்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.மேலும் இரண்டாவது தடைவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா?என்ற கேள்விக்கு தற்போதைக்கு இது குறித்து பதிலை தெரிவிக்க முடியாது இதற்கான காலம் உள்ளது.இது குறித்து தற்போது தீர்மானிக்கவேண்டிய தேவையில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக மணித்தியாலத்திற்கு மணித்தியாலம் அரசாங்கத்தில் மாற்றம் நிகழ்ந்த வண்ணமே உள்ளன என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி இன்னும் ஒரு வருட காலத்தில் என்னநடக்கும் என யாரும் கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: