தமிழ்லீடர்

துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 90 சந்தேகநபர்களுக்கு மேல் கைது!

கடந்த வருடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 90 வீதத்திற்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் துப்பாக்கி பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வைத்திருப்போரையும் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும், இந்த நடவடிக்கையில் பொதுமக்களும் அவர்களது ஒத்துழைப்பை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை தவிர, இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பரிசில்களை வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.         

Add comment

Recent Posts

%d bloggers like this: