தமிழ்லீடர்

துப்பாக்கிச் சூடு- பெண் கைது!

கிராண்ட்பாஸ்- ஹேனமுல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண் இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்து வந்துள்ளாரெனும் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான புளுமென்டல் சங்காவை கைதுசெய்வதற்கும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றுக்காலை 8 மணியளவில் இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் நால்வர் காயமடைந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add comment

Recent Posts

%d bloggers like this: