தமிழ்லீடர்

துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி காயம்!

கடவத்தை நகரில் முச்சக்கரவண்டியொன்றில் நபர் ஒருவர் ஹெரோயின் வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளார்கள்.

அந்த முச்சக்கரவண்டியுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கடவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வர தயாரான நிலையில், தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸ் அதிகாரியிடமிருந்த துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதால் துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளாரென குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த பொலிஸ் அதிகாரி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,
சந்தேகநபர் வசமிருந்த 10 கிராம் நிறையுடைய ஹெரோயின் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முச்சக்கரவண்டியில் பயணித்த சந்தேகநபரின் தாயார், மனைவி மற்றும் பிள்ளைகளும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

Add comment

Recent Posts

%d bloggers like this: