தமிழ்லீடர்

துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய விசேட கலந்துரையாடல்!

துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக, அதிக அந்நிய செலவாணிகளை ஈட்டிக் கொள்வதற்கான விசேட கலந்துரையாடல், இன்று (08) கொழும்பிலுள்ள துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறைப் பிரதியமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஒலுவில் துறைமுகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, சர்வதேச நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகள், உள்ளிட்ட துறைமுகங்களை அபிவிருத்திக்கு இட்டுச்செல்லக் கூடிய வழிவகைகளையும் தேசிய கொள்கைத் திட்டமிடல் அமுலாக்கத்தை மேம்படுத்தல் பற்றிய தகவல்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் துறைமுக அபிவிருத்திகள் ஊடாக, இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தல், சர்வதேச மட்டத்திலான உறவுகளை வலுப்படுத்துவதன் ஊடாக வருமானம் அதிகமாக அமையப் பெறவேண்டும் என்பது மிக முக்கிய விடயமாகக் கருதப்படுகின்றன.

ஒலுவில் துறைமுகப் பிரச்சினைகளைத் தீர்த்து, துரிதமான அபிவிருத்திக்கு இட்டுச் செல்லப்படுமென, பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் இதன்போது தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில், வர்த்தக கைத்தொழில், கூட்டுறவுத் துறை நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றல், அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய  தலைவருமான ரிஷாட் பதியுதீன், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹரூப் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.

அம்பாறை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சி இஸ்மாயில், துறைமுக அதிகார சபையின் பொறியியலாளர் நௌபர், அட்டாளைச் சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் அன்சில் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.               

Add comment

Recent Posts

%d bloggers like this: