துறைமுக அதிகார சபை தலைவர் – பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் இன்று மாலை சந்திப்பு!

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களுக்கும், துறைமுகங்கள் அதிகார சபை தலைவர்      காவன் டீ ரத்நாயக்க ஆகியோருக்குமிடையில் இன்று மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பானது பிரதியமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும்,
துறைமுக அதிகார சபை தலைவர் பிரதியமைச்சராக பதவியேற்றதன் பின் இதுவே முதல் சந்திப்பெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுக அபிவிருத்தி பற்றியும், திருகோணமலை துறைமுகத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு துறைமுக விடயங்கள் பற்றியும், ஆராயுமாறு பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் இதன்போது துறைமுக அதிகார சபை தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய திட்டங்கள் அதிக செலவாணியை ஈட்டிக் கொள்ளும் வழி முறைகள் தொடர்பாக துறைமுக அதிகார சபை தலைவர் பிரதியமைச்சருக்கு மேலும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும்,
சந்திப்பில் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான எம்.பீ.எம்.முஸ்தபா, எஸ்.எம்.றிபாய் மற்றும் பிரதியமைச்சரின் ஆலோசகர் பொறியியலாளர் எஸ்.ஐ.மன்சூர் அனைவரும் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: