தமிழ்லீடர்

தெமோதர மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பிற்கு தீர்வு கிடைக்குமா???

ஊவா மாகாணத்தின் அனைத்து அரச வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.மேற்படி தெமோதர மாவட்ட வைத்தியசாலைக்கு மத்தியில் வீதியொன்றை நிர்மாணித்தல் தொடர்பான பிரச்சினையின் போது ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் திசாநாயக்க நடந்து கொண்ட விதத்துக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பிரச்சினை தொடர்பில் மாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் பிரச்சனைக்கான தீர்வை எடுக்க முடியாமல் போனதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண தொடர்பாளர் டாக்டர் பாலித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் இதனிடையே, தெமோதர பிரதேச வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாக அங்குள்ள நிர்வாகக்குழு, பதுளை மாவட்ட சுகாதார சேவை அலுவலகத்துக்கு அறிவித்துள்ளது.இதேவேளை, வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ இல்லமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: