தேசிய முன்னணியின் யாப்பை பற்றி மனோ கணேசன் தெரிவிக்கையில்…!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் யாப்பை அதன் பங்காளிக் கட்சிகளுக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணிக்கு அவசியமான யாப்பு குறித்து பங்காளிக் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் கடந்தவாரம் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பில், யாப்பு தொடர்பான முதற்கட்ட வரைவு அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சில கட்சிகளின் தலைவர்கள் பதிலளித்துள்ள நிலையில், பாதீட்டின் பின்னர் இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ள நிலையில், கூட்டணி தொடர்பான இறுதி முடிவை மேற்கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டில் அதன் அனைத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் உள்ளனர் என அமைச்சர் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.                               

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: