தேர்தலை நடத்தாவிடின் முறையினை நீக்கிவிட வேண்டும்! மஹிந்த தேசப்பிரிய

உரிய காலத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை நடத்தாவிடின் அரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையினை நீக்க வேண்டும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கும் போது, உரிய காலத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை நடத்துவதே ஜனநாயக பண்பு எனவும் தெரிவித்தார்.

மாகாணசபை தேர்தலை உரிய காலத்தில் நடத்த முடியாவிட்டால் தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியம் இல்லையெனவும், மாகாணசபைகள் தேவையில்லையென, நினைத்தால் அரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையினை நீக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

அதேவேளை, எந்த தேர்தல் முதலில் நடைபெற வேண்டும், என வாதம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும், முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டுமாயின், மாகாண சபை தேர்தலின் பின்னரே ஏனைய தேர்தல்களை நடத்த முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடத்தாவிட்டால் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை விட்டு விலக போவதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.                               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: