தமிழ்லீடர்

தொழிற்சங்கத்தில் பலமில்லை ஆனால், அரசியல் பலத்தால் வெற்றியை பெறுவோம்!

மலையக சம்பள பிரச்சினை பற்றி பேச தொழிற்சங்க பலம் இல்லை, அரசியல் பலம் மூலம் வெற்றியை பெறுவோம், ஆனால், முடியாவிட்டால் பதவியை விடுவோமென, அமைச்சர் பழனி திகாம்பரம் அரசியல் பதவிகளை பணயம் வைத்து, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்காக தீர்மானமொன்றை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (7) மலையக அபிவிருத்தி அதிகாரசபையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ம​லையக மக்களின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்த அதிகாரசபை உருவானதெனவும், பெருந்தோட்ட மக்களின் சம்பள விடயத்தில் எமது அ​மைச்சுப் பதவிகளை பணயம் வைத்து அரசியல் பேரம் பேசும் விடயங்களை முன்னெடுத்து வருகின்றோமெனவும் தெரிவித்துள்ளார்.

எனவே நாளையே எமது பதவி எம்மை விட்டுப்போகலாம், நாம் இல்லாவிட்டாலும் எம்மால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ்வேலைத்திட்டங்களை எமக்கு பின்னால் வருபவர்கள், சிறந்த முறையில் கொண்டு செல்ல வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.                               

 

Add comment

Recent Posts

%d bloggers like this: