தமிழ்லீடர்

நகர அபிவிருத்தி அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம்!

மேல்மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று  காலை யாழ்ப்பாணத்துக்கு விஐயமொன்றை மேற்கொண்டுள்ளதாகவும்,
இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தை மையமாக கொண்டு செய்யப்படும் அபிவிருத்தி வேலைகளை பார்வையிட்டுள்ளார், இதன் போது புதிய அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இன்று  யாழ்ப்பாணத்துக்கு விஐயம் மேற்கொண்ட அமைச்சர் யாழ் புகையிரதம் நிலையம் முன்பாக ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டும் நிலையான திட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தாரென குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து யாழ் நீதிமன்றத் தொகுதிக்கு முன்பாக யாழ்ப்பாண நிர்வாக தொகுதிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன் பின்னர் தூர சேவை பஸ் தரிப்பிடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்துள்ளார்.

இந் நிகழ்வுகளில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டிருந்தார்கள்.                            

Add comment

Recent Posts

%d bloggers like this: