நஞ்சருந்தி மனைவி உயிரிழப்பு!

திருகோணமலை கந்தளாய் பகுதியில்  இளம் பெண்ணொருவர் நஞ்சருந்தி உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

கந்தளாய், ரஜ எல பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயாரே நேற்று இவ்வாறு  நஞ்சருந்தி  உயிரிழந்துள்ளார், என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24 வயதுடைய சங்கரணி சன்சத  உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பைப் பேணியதால், அதனை விட்டு விடும் படி மனைவி கூறிய போது கணவர் அதனை ஏற்காத நிலையிலே மனைவி மன விரக்தியில்  நஞ்சருந்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.                                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: