தமிழ்லீடர்

நடைபாதை வியாபாரிக்கு ஏற்பட்ட பரிதாபநிலை!!!

வவுனியா இலுப்பையடி சந்தைக்கு முன்னால் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வியாபாரம் செய்து வந்த வியாபாரி ஒருவர் தனது வியாபார நடவடிக்கையின் போது உயிரிழந்துள்ளார்.மேற்படி 155ஆம் கட்டை இரணைமடு கிளிநொச்சியைச் சேர்ந்த 62 வயதுடைய நடைபாதை வியாபாரியே இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,வவுனியா இலுப்பையடி, தினச்சந்தைக்கு முன்னாலுள்ள சந்தை சுற்றுவட்ட வீதியில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வியாபாரம் மேற்கொண்டுவரும் குறித்த வியாபாரி இன்று காலை 6மணியளவில் கடை ஒன்றில் தேனீர் குடித்துவிட்டு தனது நடைபாதை வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முற்பட்டபோது, தர்மலிங்கம் வீதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு முன்னால் சாய்ந்து இருந்த நிலையில் திடீரென்று கிழே வீழ்ந்துள்ளார்.

இதைக்கண்ட ஏனைய வியாபாரிகள் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் ஏற்கனவே, எடுத்து வரும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் ஆரம்ப விசாரணைகளின்போது மாரடைப்பினால் உயிரிழந்திருக்காலம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தற்போது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: