தமிழ்லீடர்

நன்னீர் பகிர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பெரியவிளான் மக்கள் போராட்டம்!!!

விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட பெரியவிளான் பிரதேசத்தில் இருந்து ஏனைய பகுதிகளுக்கென நன்னீர் எடுத்துச் செல்வதற்கு யாழ்ப்பாணம் பெரியவிளான் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

மேற்படி நீரை வெளி இடங்களுக்கு எடுப்பதனால் குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் குடிநீருக்காக தாம் ஏனைய பிரதேசங்களுக்கு செல்ல வேண்டி ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட பெரியவிளான் பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.பெரியவிளான் சந்தியில் இன்று காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் தமது கிராமத்திலிருந்து காரைநகர் பிரதேசத்துக்கு நாளாந்தம் அதிகளவான நன்னீர் உறிஞ்சி செல்லப்படுவதாகவும் இதனால் நன்னீர் உவர் நீராக மாறி வருவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: