நாங்கள் கால அவகாசம் கொடுப்போம்.ஆனால் தமிழ்மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.-சி வி விக்னேஸ்வரன்

கால அவகாசம் என்பது அரசாங்கத்திற்கு ஒரு நன்மையினை பெற்றுக்கொடுப்பதாக அமையும், தமிழ்மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது என சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேற்படி முல்லைத்தீவு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட ஒருதொகுதி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணியின் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட 130 மாணவர்களுக்கு மாங்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் புலம்பெயர் தமிழ் மக்களது நிதி பங்களிப்பில் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஸ்தாபகரும் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நீதியரசரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி வி விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கு நிகழ்வின் இறுதியில் ஊடகவியலாளர் ஒருவர் மீண்டும் அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதுதொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன . என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் இருந்து வந்த அதிகாரியிடம் நான் கேட்டேன் நீங்கள் கால அவகாசம் கொடுத்துள்ளீர்கள் என்ன என்ன வேலை இதுவரை நடைபெற்றுள்ளது என்று கவனிக்கவில்லை குறிப்பிட்ட ஒரு கால எல்லைக்குள் செய்யச்சொல்லவேண்டும் என்று சொன்னபோது ஓம் என்று ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். 

அதனை விட இன்னும் ஒன்று சொன்னேன் நீங்கள் இதுவரைக்கும் சொல்லிவிட்டு போவீர்கள் அவர்கள் செய்யாமல் விட்டால் என்ன செய்யப்போறீங்கள் என்று கேட்டேன். இல்லை இல்லை எப்பொழுதும் நாங்கள் உங்களுடன் இருப்போம் என்று சொல்லிவிட்டு அமெரிக்க போய்விட்டது இப்பொழுதும் அமெரிக்கா இங்கு இல்லை

இதனை இழுத்துக்கொண்டு செல்வதால் தமிழர்களின் பிரச்சனைகளை உலகம் மறந்துவிடும் எத்தனையோ பிரச்சனைகள் எத்தனையோ நாடுகளுக்கு வந்து இழுத்தடிப்பு செய்து அதனால் ஒரு நன்மையும் நடைபெறவில்லை.

அதனால் நாங்கள் கால அவகாசம் கொடுப்பதற்கு முற்றிலும் எதிர் இது தொடர்பில் உடன் நடவடிக்கைகைள ஜ.நா எடுக்கவேண்டிய அவசியம் உள்ளது கால அவகாசத்தினால் இவ்வளவு காலமும் ஒன்றும் செய்யவில்லை பயங்கரவாத தடைச்சட்டத்தினை எடுப்பது என்பது மாற்றீடு செய்வது என்றுசொன்னார்கள் இதுவரையும் ஒன்றும் செய்யவில்லை கால அவகாசம் என்பது அரசாங்கத்திற்கு ஒரு நன்மையினை பெற்றுக்கொடுப்பதாக அமையும் தமிழ்மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது என்பது எனது கருத்து என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: