தமிழ்லீடர்

நாச்சிமார் கோவிலடியில் இளைஞர்கள் மீது வாள் வெட்டுத்தாக்குதல்.

கோவிலுக்கு பூஜை வழிபாடுட்டில் ஈடுபட வந்த இளைஞர்கள் மீது, வாள் வெட்டு குழு தாக்குதல் சம்பவமொன்று, யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில், நேற்று (15) காலை நடைபெற்றுள்ளது.

தைப்பொங்கல் தினமான நேற்றைய தினம் நாச்சிமார் கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இந்நிலையில், கோவிலுக்கு அருகில் இளைஞர்கள் கூடி நின்ற போது, அப்பகுதிக்கு வந்த வாள் வெட்டுக்குழுவினர், இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதலில், இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.         

Add comment

Recent Posts

%d bloggers like this: