தமிழ்லீடர்

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் வாகனம் விபத்து!

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பயணித்த வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த விபத்து நடைபெற்றுள்ளதுடன், அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது.

பூனேவ, மககும்புகொல்லேவ பிரதேசத்தில் நடைபெற்ற இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் ​சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை ஆகியோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெரியஉலுக்குளப் பிரதேசத்தைச் ​சேர்ந்தவர்களே, காயமடைந்துள்ள நிலையில், இவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் வேறொரு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக, பிரதேசவாசிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.                     

Add comment

Recent Posts

%d bloggers like this: