தமிழ்லீடர்

வெளிநாட்நாட்டு நீதிபதிகளை உள்வாங்கி போர் குற்றங்களை விசாரிக்கவும்! பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்கி போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை செய்யவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேற்படி இன்றைய தினம் நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

“ ஜெனீவாவில் வெளிவிவகார அமைச்சர் ஆற்றிய உரையின் மூலம், உள்நாட்டு கட்டமைப்புக்கள் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமானால், இலங்கை அரசு வாக்குறுதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்தியாக வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டுள்ளோம். 

அத்துடன் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஏனெனில் போரில் ஈடுபட்ட தரப்பினரிடையே இலங்கை அரசும் இருப்பதால், சுயாதீனமான விசாரணை இடம்பெற வேண்டுமானால் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டியது அவசியம். 

எனினும் மறுபுறம் நாட்டை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஈடுபட்ட ஆயுதக்குழு. அதனால் இந்த விசாரணைகளில் இலங்கை அரசால் சுயாதீன விசாரணையாளராக ஒருபோதும் செயற்பட முடியாது. அதனாலேயே எந்தவொருவராலும் குற்றம்சாட்ட முடியாத சுயாதீனமான விசாரணைப் பொறிமுறையாக இருக்க வேண்டுமானால் வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம். 

எனினும் அதேவேளை இந்த விடையத்தில் சர்வதேச சமூகத்திற்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை சிறிலங்கா அரசு தொடர்ந்தும் மீற முடியாது. அவ்வாறு மீறினால் நாடு முழுமையான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை முகம்கொடுக்க நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: