தமிழ்லீடர்

நாடாளுமன்ற குழுநிலை விவாதங்களுக்கு சமூகம் கொடுக்காத மைத்திரி!

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணியிலிருந்து நடைபெற்றுவரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த விவாதங்களுக்கு சமூகமளிக்கவில்லை.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்தே இன்றைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றது.

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை, குழுநிலை விவாதங்களின்போது தோற்கடிக்கப் போவதாக ஐ.தே.க.யின் பின்வரிசை உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் அவருக்கான நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்படுமா? எனும் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியிலேயே இன்றைய விவாதங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விவாதங்களில் பங்குபற்றவில்லை.                           

Add comment

Recent Posts

%d bloggers like this: