தமிழ்லீடர்

நாட்டின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தலை நடத்துங்கள்

நாடு இன்றிருக்கும் கடுமையான சூழ் நிலையில் உடனடியாக பாராளுமன்ற தேர்தலை நடத்தி நிரந்தரமான அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் மீரா ஜும்ஆ பள்ளிவாயலின் ஜூம்மா தொழுகையை தொடர்ந்து பள்ளிவாயலின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

மேற்படி காத்தான்குடி ஜனநாயகத்துக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் “உடனடியாக பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும்”என்பதை வழியுருத்தியவாறு பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர். 

அத்துடன் இவ் ஆர்ப்பட்டத்தில்  அதிகளவானோர் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: