தமிழ்லீடர்

நான்கரை வருடங்களுக்கு முன்னதாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை.

நான்கரை வருடங்களுக்கு முன்னதாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேற்படி ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

மேலும் அவ்வாறு கலைப்பதாக இருந்தால்,பெரும்பான்மை இருக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.எனினும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டமை அடிப்படை உரிமை மீறல் ஆகும்.

அத்துடன் இச் செயல் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ள நிலையில் பிரதம நீதியரசர் தலைமையிலான 7 நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: