நிதி மோசடி விசாரணை வழக்குக்குரிய இரண்டாவது நீதிமன்றம் இன்று திறந்து வைக்கப்பட்டது!

பாரியளவிலான நிதி மோசடி, ஊழல் குறித்த வழக்குகளை விசாரணை செய்வதற்காக மூன்று நீதிபதிகளை உள்ளடக்கிய, இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக கடமையாற்றிவரும் ஆர்.குணசிங்க, அமல் ரணராஜா, சசி மஹேந்திரன் ஆகியோரே இதில் கடமையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரியளவிலான நிதி மோசடி மற்றும் ஊழல் குறித்த வழக்குகளை விசாரணை செய்வதற்காக, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றங்கள் மூன்றை அமைத்து, வழக்குகளை துரிதமாக விசாரணை செய்வதற்காக அமைச்சரவை வழங்கியிருந்த அனுமதிக்கமைய, 2 ஆவது விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.                         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: