நேற்றய தினம் திருகோணமலையில் நாடாளுமன்ற தேர்தலை நடாத்துமாறு ஆர்ப்பாட்டம்.

நேற்று  ஞாயிற்றுக்கிழமை 2018.11.25 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி, பொது ஜன ஐக்கிய முன்னணி ஆதரவாளர்கள் இணைந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சபாநாயகர்  கரு ஜெயசூரியவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாராளுமன்ற தேர்தலை நடத்தக் கோரியும். திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

திருகோணமலை மாவட்ட முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்களான (சுசந்த புஞ்சிநிலமே, ஜயந்த விஜயசேகர, கிழக்கு மாகாண சபை முந்நாள் அமைச்சர் ஆரியவதி கலபதி, முந்நாள் உறுப்பினரான பிரியந்த பத்திரன )ஆகியோரும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

திருகோணமலை ஏகாம்ரம் வீதி குவாட்டலூபே தேவாலயத்தின் முன் இருந்து மக்கள் ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள் மணிக்கூண்டு கோபுர முன்றலை வந்தடைந்து அங்கு எதிர்ப்பு கோசங்களை எழுப்பினர் 10.00 மணிக்கு ஆரம்பித்த இந்த எதிர்ப்பு நடவடிக்கை சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: