தமிழ்லீடர்

பசில் மற்றும் வீரவங்ச இடையில் பாரதூரமான மோதல்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் அதன் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கும் இடையில் பாரதூரமான மோதல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, விமல் வீரவங்ச தரப்பு பொதுஜன பெரமுனவுக்குள்
வாய்ப்பை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,
வீரவங்ச கலந்துக்கொள்ளும் அரசியல் பேச்சுவார்த்தைகளில் கூட பசில் ராஜபக்ச கலந்துகொள்வதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில், இணக்கப்பாடு ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும், எதிர்காலத்தில் நடக்கும் எந்த தேர்தலாக இருந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும் என பசில் ராஜபக்ச கூறியிருந்தாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்சவின் இந்த கருத்தை விமர்சித்து விமல் வீரவங்ச நடத்தி வரும் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டதாகவும்,
இருவருக்கும் இடையிலான மோதல் வெளிப்பட காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.       

Add comment

Recent Posts

%d bloggers like this: