பத்து பேரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து!!!

மஹியங்கனைபதுளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.அதில் 3  சிறுவர்களும் அடங்குவர் எனவும்,இன்று அதிகாலை1.30 மணியளவில் இந்த விபத்து  இடம்பெற்றுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி திருகோணமலையிலிருந்து தியதலாவ  நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும்  மஹியங்கனையிலிருந்து மட்டகளப்பு நோக்கி பயணித்த வேன்  ஒன்றும் மோதியதில் இந்தவிபத்து  சம்பவித்துள்ளது.மேலும் குறித்த விபத்தில், வேனில் பயணித்த 12 பேர் மஹியங்கனை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,அவர்களில்10 பேர்  உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று  சிறுவர்கள், மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.மேலும் இரண்டு பெண்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

எனினும் உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு கல்லடி, டச்பார் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களை சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்கள் ஆவார்கள்.எனவே உயிரிழந்தவர்கள் தொடர்பில்  எவ்வித விபரங்களும்  கிடைக்கவில்லை என பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

எனவே விபத்தில் பலத்தகாயங்களுக்குள்ளான இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய  பஸ்சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.எனவும்பொலிஸ்  தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் வேனின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக வீதியின் பிழையான பகுதியில் பயணித்துள்ளார்.இதனால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் சாரதி மட்டக்களப்பு டச்பார் பகுதியை சேர்ந்த ஜோன் என குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: