தமிழ்லீடர்

பல தடவை சிறு குழந்தைக்கு சூடு வைத்த நபர் கைது!

1 வயதும் 10 மாதங்களு​மான குழந்தையொன்றை பல மாதங்களாக சிகரட்டால் சூடு வைத்த சந்தேகநபரொருவரை, சியம்பலாண்டுவ பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

சியம்பலாண்டுவ, 5 ஆம் இலக்க பிரதேசத்தில் வசிக்கும் குறித்த சந்தேகநபரை, கைது செய்ய முயற்சித்தபோது, குறித்த நபர் தப்பிச் சென்று தலைமைறைவாகியிருந்தார், இவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் சில உபாயங்களை பயன்படுத்தியிருந்தனர்.

பின்னர் பெண் பொலிஸ் அதிகாரியொருவரை குறித்த நபருடன் காதலராக சில நாள்கள் தொலைபேசியில்  உரையாட வைத்து, பின்னர் தன்னை நேரில் சந்திக்க வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டு, குறித்த நபரை தெபகவெல பிரதேசத்துக்கு வரவைத்த போது, பொலிஸார் உடனடியாக கைது செய்ததாக,  தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபரை சியம்பலாண்டுவ பிரதேச நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

Add comment

Recent Posts

%d bloggers like this: