தமிழ்லீடர்

பழைய விலைக்கு கட்டணங்களை அறவிடும் பேரூந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 26ம் திகதி நள்ளிரவு தொடக்கம் புதிய பேரூந்து பயணக்கட்டணங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , தொடர்ந்தும் பழைய விலைக்கே கட்டணங்களை அறவிடும் பேரூந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தலைவர் துசித குலரத்த தெரிவித்துள்ளார்.

மேற்படி பழைய விலைக்கே பேரூந்து பயணக்கட்டணங்களை அறவிடும் நடத்துனர்கள் தொடர்பில் இதுவரை 23 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மேல் மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

பழைய விலைக்கு பேரூந்து கட்டணங்களை அறவிடும் பேரூந்துகள் தொடர்பில் 0112 860 860 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்யமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார். 

லீலன்

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: