தமிழ்லீடர்

பாடசாலை அதிபர் மாணவிக்கு செய்த கொடூரமான செயல்!

அங்குணுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் 13 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை பிரதி அதிபரை கைது செய்துள்ளனர், சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 8ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி கைது செய்யப்பட்ட அதிபர் அங்குணுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவரென குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவியின் தந்தைக்கும் பிரதி அதிபரிரும் இடையில் உள்ள நட்பிற்கமைய கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னர் குறித்த பாடசாலைக்கு, இந்த மாணவி இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர், அங்குணுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் பிரதி அதிபருக்கு சொந்தமான கட்டடம் ஒன்றின் மேல் மாடியில் மாணவி தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த பிரதி அதிபர் அங்கு வைத்தே பல தடவை தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிரதி அதிபர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.                     

Add comment

Recent Posts

%d bloggers like this: