தமிழ்லீடர்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து புகையிலை விற்பனை!!!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன், காமினிபுர பகுதியில் வீடு ஒன்றில் இருந்து புகையிலை தூள் அடைக்கபட்ட 750 டின்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி இந்த சம்பவம் இன்று (22) காலை இடம்பெற்றதாக ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.ஹட்டன் பொலிஸ் வலயத்திற்க்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர அம்பேபிட்டியவின் பணிப்புரைக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவழைப்பின் போதே, இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த புகையிலை தூள் அடைக்கபட்ட டின்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்வதற்காக வைக்கபட்டிருந்ததாகவும் ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இந்த புகையிலை தூள் அடைக்கபட்ட டின்கள் இலங்கையில் தடை செய்யபட்டிருந்தாலும் அதிகமாக விற்பனை செய்யபடுவதாகவும் தெரிவிக்கபடுகின்றது.இதேவேளை, மீட்கபட்ட என்சி பெட்டிகளில் ஒரு பெட்டியில் 25 டின்கள் படி 30 பெட்டிகள் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேக நபர் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: