தமிழ்லீடர்

பாடசாலை மாணவி மீது கத்தி குத்து! குத்திய இளைஞர் தலைமறைவு;

மட்டக்களப்பு குருமண்வெளி  பாடசாலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாணவி மீது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் நேற்று முந்தினம் இடம்பெற்றுள்ளன. தற்போது மாணவி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .

கத்தியால் குத்திய இளைஞர் தலைமறைவாகிய நிலையில்
அவருடன் வந்த நண்பர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாணவியின் தந்தை சம்பவம் பற்றி கூறுகையில், தனது மகள் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது
பின்னால் வந்த  இளைஞர் ஒருவர் தனது மகளை  பாடசாலைக்கு அருகே வைத்து கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள் இனியும் எந்த பெண்களுக்கும் நடக்ககூடாது இதற்கு ஊர் மக்களும், பொலிஸாரும்  நடவடிக்கை எடுக்க வேண்டும்,
எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை, வகுப்புகளுக்கு செல்லும்போது குழுவாக இருக்கும் இளைஞர்கள் இப்படியான செயல்களில் ஈடுபடமால் இருக்க எல்லோரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இளைஞர் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஆவார், மாணவியை காதலித்து வந்துள்ளார் என தெரிய வருகிறது.  மாணவி இவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததாகவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளன. இது பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.   

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: