தமிழ்லீடர்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன கூறுகிறார் புலிகளின் ஆயுதங்களே பாதாள உலக குழுக்களின் கைகளில் உள்ளன.

இலங்கையில் கடந்த 30 வருடங்களாக நிலவிய யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. யுத்தத்தின் பின்னர் தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதங்களே இன்று பாதாள உலக குழுக்களின் கைகளில் உள்ளன என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன கூறியுள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நேற்று கண்டி அஸ்கிரிய மல்வத்து தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு இக் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு இவ் விடயம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அங்கு கருத்துத் தெரிவித்த அவர்,நாட்டில் இடம்பெறும் மனித படுகொலைகளைகளுக்கு பாதாள உலகக் குழுக்களே காரணம் இவ்வாறான கொலைகளை தடுக்க பொலிசாரின் செயற்பாடுகளுக்கு இராணுவ ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் தாம் தயாராக உள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: