தமிழ்லீடர்

பிரதமர் பெயர்ப்பலகை சேதம்!

நாவலப்பிட்டி நகரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர்ப்பலகையை, இனந்தெரியாத நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர், என்று நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில், நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரதமரை வரவேற்கும் வகையில், நாவலப்பிட்டி நகர சபையின் அனுமதியுடன், நகரில் வைக்கப்பட்ட பெயர்ப்பலகை இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது. நகரசபை தலைவர் சசங்க சம்பத்சஞ்சே, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லை  நகரிலுள்ள வியாபார நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீடிவி உதவியுடன், சந்தேகநபரை கைதுசெய்வதற்கு  நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: