பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அடுத்த வருடத்திற்கான, நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நடைபெறவுள்ள தேர்தல் உள்ளிட்ட மேலும் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் பிரதமரின் இல்லத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மேற்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத்திலிருந்து தெரியவந்துள்ளது.

பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்ததாகவும், சந்திப்பு முடிவடைந்தகையோடு சபாநாயகர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், முரண்படாத வகையில், ஆட்சியை முன்னெடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்குமாறு சபாநாயகர் இதன்போது, ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில், கலந்துரையாடுவதற்காகவே பிரதமரை சபாநாயகர், தனிப்பட்ட ரீதியில் சந்தித்ததாகவும், நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: