தமிழ்லீடர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தொடர்ச்சியாக ஊடகங்களை அச்சுறுத்தி வருகின்றார்!

ஊடகங்கள் தொடர்பில் அரசியல்வாதிகள் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும், விரிவடைந்துள்ள ஊடகத்துறையிடம், எந்தவொரு விடயத்தையும் மறைக்க முடியாது என, நாடளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேற்படி ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தொடர்ச்சியாக ஊடகங்களை அச்சுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள கூட்டு எதிர்க்கட்சி, இதனை பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில்,பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது எனவும், எவ்வாறெனினும் நட்டஈட்டை வழங்க காசோலைகளைத் தயார் செய்யுமாறு, ஊடகவியலாளர்களை பார்த்து அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளவும்முடியாது,ஊடகவியலாளர்களிடம் நட்டஈட்டை அறவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் யாராவது தெரிவித்த விடயங்களையே ஊடகவியலாளர்கள் அறிக்கையிடுகின்றார்கள். ஆகவே எவராவது வெளியிட்ட கருத்துத் தொடர்பில் குறித்த நபரிடமே கேட்டறிய வேண்டும். 

மேலும் ஊடகத்துறை தொடர்பில் பிரதமருக்கு புதுமையான பிரச்சினை ஒன்று காணப்படுகின்றது.எனினும்அவர் கூறும் வகையிலேயே ஊடகங்கள் செயற்பட வேண்டும் என நினைத்திருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக்கொள்கின்றோம். 

மேலும் இன்று ஊடகங்கள் விரவடைந்துள்ள நிலையில் ஊடகங்களிடம் எதனையும் மறைக்க முடியாது. அரசியல்வாதிகள் ஊடகங்களுடன் சற்று அவதானமாக செயற்பட வேண்டும். ஊடகங்களை அச்சுறுத்த எவருக்கும் முடியாது. ஊடகங்கள் அஞ்சப்போவதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

லீலன்

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: