தமிழ்லீடர்

பிரதமர் வருகை தந்த வீதியை மறித்து குருநாகல் மக்கள் எதிர்ப்பு!

அண்மித்த பாடசாலை – சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட குருநாகல் விஷ்வோதா தேசிய பாடசாலை பிரதமரால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிரதமர் வருகை தந்த வீதியை மறித்து பிரதேச மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைக்கு அருகிலுள்ள மாணவர்களை இணைத்துக் கொள்ளாதமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரதமர் உள்ளிட்ட பிரதம விருந்தினர்கள் நிகழ்வு இடம்பெறும் வளாகத்திற்கு செல்வதில் இடையூறு ஏற்பட்டதுடன், வீதியை திறக்க பொலிஸார் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

சிரமத்திற்கு மத்தியில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நிகழ்வு நடைபெறும் பகுதிக்கு செல்வதற்கு வீதி திறக்கப்பட்டதுடன், அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளார்கள்.          

 

Add comment

Recent Posts

%d bloggers like this: