தமிழ்லீடர்

பிரபல பாடசாலை அதிபர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது!

காலியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை அதிபர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது அலுவலகத்தில் வைத்து ஒரு இலட்ச ரூபாயை இலஞ்சமாகப் பெற்றப் போது அதிபர் கைது செய்யப்பட்டு, காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து, அவரை 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாந் தரத்துக்கு மாணவியை இணைத்துக் கொள்வதற்காகவே இலஞ்சம் பெற்றுள்ள குற்றத்திற்காக அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.                           

 

Add comment

Recent Posts

%d bloggers like this: