பிரித்தானியாவின் கார்டிப் நகருக்கு புறப்பட்ட சிறியரக விமானம் ஒன்று தனது தொடர்புகளை இழந்து மாயமாகியுள்ளது.

பிரான்சின் நாந்த நகரில் இருந்து பிரித்தானியாவின் கார்டிப் நகருக்கு புறப்பட்ட சிறியரக விமானம் ஒன்று ஆங்கிலக்கால்வாய் கடற்பரப்பில் சனல் தீவுகளுக் அருகே பறந்தவேளை தனது தொடர்புகளை இழந்து மாயமாகியுள்ளது.

மேற்படி இந்த விமானத்தில் கார்டிப் கால்பந்து கழகத்துக்காக புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட கால்பந்து விளையாட்டு வீரர் எமிலியானோ சாலா பயணம் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கத்தயாரிப்பான இந்த பைப்பர் ரக விமானம் நேற்று மாலை நாந்தில் இருந்து புறப்பட்டு கார்டிப் நோக்கிப்பறந்துகொண்டிருந்தபோது சனல் தீவுகளுக்கு அருகே திடீரென ரேடார்திரையிலிருந்து மறைந்தது.

இதனையடுத்து காணாமல்போன விமானத்தைதேடும் பணிகள் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியத்தரப்புக்களில் இருந்து முடுக்கிவிடப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட தேடுதல்களில் விமானம்குறித்த எந்தத்தடயங்களும் சிக்கவில்லை.

மேலும் இந்த விமானத்தில் பயணம் செய்த கால்பந்து வீரரான 28 வயதான பிரான்சின் எமிலியானோ சாலா இதுவரை நாந்த் கழகத்துக்கு விளையாடியவர். அதன் பின்னர் கடந்தவாரம் கார்டிப்கால்பந்து கழகத்துக்காக 18 மில்லியன் பவுண்ஸ் ஊதியத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு அங்கு அழைத்துச்செல்லப்படும்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: