தமிழ்லீடர்

புதிய அரசியலமைப்பு ஊடாக நாடு இரண்டாக பிளவுபட்டு தமிழீழம் உருவாகப்போகின்றது.-அமர்த்த தன்ம தேரர்.

புதிய அரசியலமைப்பு ஊடாக நாடு இரண்டாக பிளவுபட்டு தமிழீழம் உருவாகப்போவதாக கூறி தென்னிலங்கையில் பௌத்த பிக்கு ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.இதன் ஊடாக புதிய அரசியலமைப்புக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி புதிய அரசியலமைப்பு குறித்து பௌத்த மகாசங்கங்களும் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

மேலும் காலம் காலமாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்படுவதற்கான முயற்சிகள் இடம்பெறும் போது அதனை தடுப்பதற்கான முயற்சிகளில் பௌத்த மகாசங்கங்கள் ஈடுபட்டுள்ளமை வரலாற்றுப் பதிவுகளாக உள்ளது.

மேற்படி பண்டா செல்வா ஒப்பந்தம் தொடங்கி சந்திரிக்கா பிரபாகரன் ஒப்பந்தம் வரை இது நிகழ்ந்துகொண்டே உள்ளது. இன்று ஒட்டுமொத்த நாட்டிற்குமாக உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்புக்கு தமிழீழ சாயம் பூசப்படுகின்றமை இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எந்தவித உரிமையையும் சிங்களத்தரப்புக்கள் வழங்குவதற்கு விடமாட்டார்கள் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.

எனினும் இது குறித்து மேலும் தெரியவருவதாவதுபுதிய அரசியலமைப்பு ஊடாக நாடு இரண்டாக மாறி தமிழீழம் அமையும் என கூறி அதனை தடுக்கும் விதமாக கடந்த 15ம் திகதி முதல்  புத்தபிக்கு ஒருவர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் கொழும்பு புறக்கோட்டை அரசமரத்தடியில் அமர்த்த தன்ம தேரர் என்ற புத்தபிக்குவே இந்த உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.இதேவேளை அமெரிக்கா இலங்கையில் கடல்படைத்தளம் அமைக்கும் முயற்சியையும் கைவிடவேண்டும் எனவும் இவர் உணவு தவிர்ப்பு போராட்டம் மேற்கொண்ட இடத்தில் எழுதப்பட்டுள்ள பதாதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவின் தலையீடுகளுக்கு எதிராகவும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் படங்கள் பொறிக்கப்பட்ட வாசகங்களும் இந்த புத்தபிக்கு மேற்கொள்ளும் உணவு தவிர்ப்பு போராட்ட இடத்தில் பதாதைகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், புதிய அரசியல் அமைப்பிற்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக கைவிட வேண்டும் என சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் பிரபாகரன் கொல்லப்பட்டவுடன் பிரச்சினைகள் அனைத்துமே முடிவுக்கு வந்துவிட்டது.நந்திக்கடல் யுத்தமே அவர்களுக்கான (தமிழர்களுக்கான) தீர்வு என அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களிடம் தேசிய இணக்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களை இன்று சந்தித்த தேசிய இணக்க சம்மேளனம் இந்த கருத்துக்களை அவர்களிடம் முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், புதிய அரசியல் அமைப்பிற்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அந்த சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பும் – முஸ்லிம் காங்கிரசும் ரணிலுடன் செய்துகொண்ட ஒப்பந்தமே இன்று அரசியல் அமைப்பாக வெளிவர இருக்கின்றது. 

அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க இந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.பிரபாகரன் கொல்லப்பட்டவுடன் பிரச்சினைகள் அனைத்துமே முடிவுக்கு வந்துவிட்டது. நந்திக்கடல் யுத்தமே அவர்களுக்கான தீர்வு.

ஆனால் இப்போது புதிய தீர்வுகளை கூறிக்கொண்டு சுமந்திரன் போன்றவர்கள் வரவேண்டிய அவசியம் இல்லை. இந்த முயற்சிகள் இலங்கையின் முயற்சிகள் அல்ல. சர்வதேசத்தின் முயற்சிகள். ஆகையினால், ஜனாதிபதியும் – பிரதமரும் உடனடியாக புதிய அரசியலமைப்பு வேலைத்திட்டங்களை கைவிட வேண்டும். இதற்கு மகாநாயக தேரர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களிடம் தேசிய இணக்க சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: