தமிழ்லீடர்

புதிய கூட்டணிக்கு அத்திவாரமிடும் மஹிந்த மற்றும் மைத்திரி!!!

புதிய கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கும், எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இதேவேளை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி என்பன தனிநபரில் தங்கியிருக்காது, ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: