தமிழ்லீடர்

புன்னக்குடா கடலில் நண்பர்களுடன் நீராடச்சென்றபோது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னக்குடா கடலில் நீராடியபோது, அலையில் அள்ளுண்டுச் சென்ற மாணவனொருவனின் சடலம் நேற்றய தினம் (11)ஆம் திகதி காலை மீட்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் கூறினர்.

செங்கலடி குமாரவேரலியார் கிராமத்தைச் சேர்ந்த, 14 வயதுடைய மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

(10)ஆம் திகதி மாலை வேலை ஐந்து மாணவர்கள் புன்னக்குடா கடலில் நீராடுவதற்குச் சென்றிருந்தபோதே, குறித்த மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். 

இந்நிலையில் ஏனைய மாணவர்கள் வழங்கிய தகவலுக்கமைய, மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில், ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: