தமிழ்லீடர்

புலமை பரிசில் பரீட்சையை ரத்துச் செய்ய நடவடிக்கை!

5ஆம் தர புலமை பரிசில் பரீட்சையை ரத்துச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு இதனை தெரிவித்ததுடன்,
போதைப்பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் மேலும் விரிவுபடுத்த தீர்மானித்துள்ளதாகவும், ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக முப்படையினரும் காவற்துறையினரும் இணைந்து மிகவும் பலமான முறையில் இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.     

Add comment

Recent Posts

%d bloggers like this: