புலிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் வசம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரிடம் உள்ளதாகவும், கொழும்பில் விடுதலைப் புலிகள் தமது தேவைக்காக பயன்படுத்திய காணிகள் தற்போது கோட்டாபய ராஜபக்சவிடம், என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கி தகவலின் போது,
“எனது கணவர் உயிருடன் இருக்கின்றார் என்ற நம்பிக்கையில்தான் இன்னும் அலைந்து திரிகின்றேன். சரணடைந்தவர்களை யுத்தத்துக்குப் பின்னர் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிந்த பிறகு விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரின் 04ஆம் மாடிக்கு எழிலன் கொண்டு செல்லப்பட்டமைக்கான சாட்சியங்களும் உள்ள நிலையில், பத்திரிகையிலும் அது தொடர்பில் செய்தி வெளியாகி இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் கூட புலிகளின் கப்பல்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் கோட்டாபயவிடம் ஒப்படைத்துள்ளரென அனந்தி சசிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.                               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: