தமிழ்லீடர்

பெண்ணின் சடலம் மீட்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில், உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலம் ​நேற்று காலை  பொலிஸாரால் மீட்பு.

குறித்த நீர்த்தேக்கத்தில் சடலம்  மிதந்து வருவதாக அப்பகுதி மக்கள், தலவாக்கலை பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலையடுத்து, சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது.

சடலம் நீர்த்தேக்கத்தில் நீண்ட நேரம் இருந்தால், சடலத்தை அடையாளம் காணமுடியாதிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைக்காக, நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் குறிந்த மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றார்கள்.                                 

Add comment

Recent Posts

%d bloggers like this: