பெண்ணொருவரின் கொடூர செயலால் உயிரிழந்த தாய்!!!

கஹவத்தமடலகம பகுதியில்  பெற்றொரை பெண்ணொருவர் கட்டையால் தாக்கிய சம்பவம்  பதிவாகியுள்ளது.மேற்படி இந்தச் சம்பவத்தில்  காயமடைந்த பெற்றோர் கஹவத்த  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை  தொடர்ந்து அப்பெண்ணின் தாயார்  உயிரிழந்துள்ளதாகவும் அவருக்கு 52 வயது  என இனங்காணப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய  பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,அவர்  மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும்  வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கஹவத்த  பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: