தமிழ்லீடர்

பெரும் அபாயத்தை எதிர்கொள்ளும் மக்கள்.

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயா பிரதேசத்தில், தனியாருக்குச் சொந்தமான நிலப்பரப்பில் பாரியளவிலான கருங்கல் முறையாக அகற்றப்படாமையால், அதற்கு அருகில் வசிக்கும் பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ளார்கள்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்துடன், இப்பகுதியில் மண் வெட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள  உரிமையாளர், அங்கு அபாய நிலையில் காணப்படும்  கருங்கல்லை அகற்றும் பணிகளில் ஈடுபடவில்லையெனவும், தெரிவித்துள்ளார்கள்.

சில வருடங்களுக்கு முன்னர் அதே இடத்தில் கற்குவாரியொன்று நடாத்தி வந்துள்ளதாகவும், அதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்ட நிலையில், பிரதேச மக்கள் ஒன்றிணைந்து முறைப்பாடு பதிவு செய்தமையால் குறித்த கற்குவாரியை மூடுவதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் அதே இடத்தை வியாபாரியொருவர் வாங்கி, மண் வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் குறித்த பகுதியில் காணப்படும் பாரியளவிலான கருங்கல் முறையாக இன்னமும் அகற்றப்படாது காணப்பட்டு வருவதால், தமது பிரதேசத்தை சுற்றி  அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குறித்த நில உரிமையாளருக்கு அறிவித்த போதும், அது வேறு வழிகளில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.                           

Add comment

Recent Posts

%d bloggers like this: