பேருந்து விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த  சொகுசு பேருந்து நாத்தாண்டியா, ஹமில்டன் கால்வாயில் விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் மூவர் பெண்களாவர் மேலும் 20 பேர் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: