தமிழ்லீடர்

பொதிகளை வழங்கிய நபர் கைது.

அவுஸ்திரேலியா – மெல்பன் மற்றும் கென்பரா ஆகிய நகரங்களில் உள்ள தூதரக காரியாலயங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் பொதிகளை வழங்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

பிரித்தானியா, அமெரிக்கா, சுவிசர்லாந்து, பாகிஸ்தான், இந்தியா, கிரீஸ், தென்கொரியா, நியூசிலாந்து, இத்தாலி, ஸ்பானியா ஆகிய நாடுகளில் உள்ள தூதரக காரியாலயங்களில் இப்பொதிகள் நேற்று முந்தினம் கிடைக்கப்பெற்றுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அவுஸ்திரேலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், குறித்த நாடுகளில் உள்ள தூதரகங்களில் இதுவரை 38 ​பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த பொதிகளை வழங்கிய சந்தேகநபர் 48 வயதுடையவர், எனவும் தெரிவித்துள்ளார்கள்.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: